உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Friday, May 31, 2013

மின்துறை செய்திகள்: மின் வாரியத்தில் 1000 Technical Assistant பதவிக்கு...

மின்துறை செய்திகள்: மின் வாரியத்தில் 1000 Technical Assistant பதவிக்கு...

Sunday, May 26, 2013

அபாயக் கட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை! (விகடன்.)

இந்தக் கட்டுரையின் உரிமையாளர் விகடன்.
 - ஜி.பழனிச்சாமி 
படங்கள்: தி.விஜய்
''ஒரு நாட்டின் வளம், காட்டு வளத்தில் அடங்கியுள்ளது என்பதையும் காடுகளின் வளர்ச்சியால் மனித இனம் நன்மை அடைகிறது என்பதையும் உணர்ந்துள்ள எனது தலைமையிலான அரசு, காடுகளைக் காக்கும் கடமையை, கண்ணும் கருத்துமாக ஆற்றி வருகிறது. அந்த வகையில், வளம் மிக்க தமிழ்நாட்டின் வன வளங்களை வலுப்படுத்தும் வகையில், நாட்டுக்கு அழகையும், பொலிவையும் தரக்கூடியதும், மக்களுக்கு மிகுந்த பயனைத் தரக்கூடியதுமான வனவிலங்குகளையும், பறவைகளையும் பாதுகாக்க, ஜப்பான் நிதி உதவியுடன் வன உயிரினங்கள் அதிகமாக வாழும் பகுதிகளை இணைத்து புதிதாக நான்கு வன உயிரின சரணாலயங்கள் ஏற்படுத்தப்படும்''

Friday, May 17, 2013

அதார் அட்டைக்கு தங்கள் விவரங்களை பதிந்துள்ளீர்களா ? தங்கள் ஆதார் அட்டையை டவுன்லோட் செய்ய அல்லது அதன் நிலையை அறிய...


2010, 2011 மற்றும் 2012 ஆகிய மூன்று ஆண்டுகளில் மூன்று விதமான கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டன. இதில் 2010ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் ஆதார் அட்டைக்கான கண் விழித்திரை பதிவு, கை ரேகைகள் பதிவு மற்றும் Bio-Metric முறையில் புகைப்படம் ஆகியவை தற்போது நாடு முழுவதும் முகாம்கள் வாயிலாக சேகரிக்கப்பட்டு வருகிறது.

Sunday, May 12, 2013

சட்டசபை, லோக்சபா தேர்தல் வரும்போதெல்லாம், கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட மக்களுக்குப் புளித்துப் போன ஒரு வாக்குறுதி


சட்டசபை, லோக்சபா தேர்தல் வரும்போதெல்லாம், கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட மக்களுக்குப் புளித்துப் போன ஒரு வாக்குறுதி, அவிநாசி-அத்திக்கடவு திட்டம். தேர்தலுக்குத் தேர்தல், சம்பிரதாயமாக இதை அறிவிக்கும் அரசியல் கட்சியினர், அதன் பின் அதைப்பற்றிப் பேசுவது கூட இல்லை.

பில்லூர் மற்றும் பவானிசாகர் அணைகள் நிரம்பிய பின், மழைக்காலத்தில் வீணாகும் தண்ணீரை கால்வாய்கள் மூலமாக, குளங்கள் மற்றும் குட்டைகளில் நிரப்பி, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதுதான் இத்திட்டம். கடந்த 1956ல் காமராஜர் ஆட்சியின் போது இத்திட்டத்துக்கு, 132 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது; தற்போது 1,800 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும் என்கிறார்கள்.

அவினாசி அத்திக்கடவு திட்டம்


http://avinashiathikadavu.blogspot.in   ல் வெளிவந்த  பதிவு 


அவினாசி அத்திக்கடவு திட்டம்

 அத்திக்கடவு அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம்  
ஒரு வரலாறு .... ஒரு கோரிக்கை .... ஒரு தீர்வு ...

             கடந்த 60 ஆண்டு காலமாக அவினாசி பகுதி தமிழகத்திலேயே கடும் வறட்சியின் கொடுமையை அனுபவித்து வரும் பகுதியாகும். இத்திட்டம் பாசன திட்டம் இல்லாமல் நிலத்தின் வழியாக ஏற்கனவே இயற்கையாக வந்து கொண்டிருந்த கால்வாய்கள் மூலம் வறண்டு கிடக்கும் குளம், குட்டைகளுக்கு நீரை நிரப்புவதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து எங்கள் பகுதின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டமாக இருக்கிறது. காரமடை, மேட்டுபாளையம், அன்னூர்,  திருப்பூர், அவினாசி, சேவூர், குன்னத்தூர், பெருந்துறை, காங்கயம், ஊத்துகுளி, நம்பியூர், புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை அடங்கிய 7 சட்டமன்ற தொகுதிகளைச் சார்ந்த 35 லட்சம் மக்களுக்கு பயன்படும் திட்டமாகும். 

Friday, May 10, 2013

பரளிக்காடு “சுழல் சுற்றுலா” (மண், மரம், மழை, மனிதன்.தளத்தில் வந்த பதிவு)

http://maravalam.blogspot.in/2013/05/blog-post.html?utm_கோடைவிடுமுறையில் பரபரப்பான நகர வாழ்கையிலிருந்து குளு குளு மலைவாசஸ்தலங்களை நோக்கி பயணித்து மிக அதிக தொகைகளை செலவழித்தும் உணவின்றி, நீரின்றி  கூட்ட நெரிசலில்சிக்கி கவலை தரும் பயணமாக மாறிவிடுவதுண்டு. மாறாக தமிழ்நாடு வனதுறையின் பரளிக்காடு சுழல் சுற்றுலா பரிசல் பயணம், கரைகளில் வனவிலங்குகள், அழகிய பறவைகள், ரீங்காரமிடும் வண்டுகள், ஒரு மணிநேர காட்டுப் பயணம் (Trekking), சுகமான ஆற்றுக் குளியல், சுவையான மதிய உணவு,  பழங்குடியின மக்களின் கலாச்சாரம், வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள வாய்ப்பு என  இயற்கையை  ஒரு நாள் முழுமையாக பரபரப்பின்றி அனுபவிக்க ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முன்பதிவு செய்து விடுமுறையை இனிதாக கழியுங்கள்.
 
பரிசல் துறையின் முகப்புத் தோற்றம்

Tuesday, May 07, 2013

தண்ணீர் – கேள்வி பதில் ! ( யாழ் தளத்தில் வந்த பதிவு )கேள்வி 1:
நம் நிலத்தில் உள்ள தண்ணீரை எடுத்து பாட்டிலில்அடைத்து நமக்கே விற்கும் உரிமை எப்படி வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கிடைக்கிறது ?

கேள்வி 2:
தண்ணீர் வியாபாரம் செய்யும் முதலைகளை அப்புறப்படுத்துவதில் உள்ள சிக்கல் என்ன ? டாஸ்மார்க் நடத்தும் அரசு குடி தண்ணீர் விற்பனையை செய்வதில்லை ஏன் ?

கேள்வி 3:
வருங்காலத்தில் தண்ணீர் பிரச்சனை எப்படி உருவெடுக்கும் ?

Wednesday, May 01, 2013

மின் வாரியத்தில் கணக்கீட்டாளர் 2 வேலை வாய்ப்பு அலுவலகம் முலம் எடுக்கமுடிவு

TANGEDCO NEWS: Direct Recruitment to the post of Assessor Grade I...: TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION (ABSTRACT) Recruitment – Direct Recruitment to the post of Assessor Grade II – Fi...
Related Posts Plugin for WordPress, Blogger...