உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Friday, May 17, 2013

அதார் அட்டைக்கு தங்கள் விவரங்களை பதிந்துள்ளீர்களா ? தங்கள் ஆதார் அட்டையை டவுன்லோட் செய்ய அல்லது அதன் நிலையை அறிய...


2010, 2011 மற்றும் 2012 ஆகிய மூன்று ஆண்டுகளில் மூன்று விதமான கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டன. இதில் 2010ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் ஆதார் அட்டைக்கான கண் விழித்திரை பதிவு, கை ரேகைகள் பதிவு மற்றும் Bio-Metric முறையில் புகைப்படம் ஆகியவை தற்போது நாடு முழுவதும் முகாம்கள் வாயிலாக சேகரிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு பதிவு செய்யப்பட்டவர்களுக்கு பதிவுச்சான்றாக ஒரு நகல் அளிக்கப்பட்டது. அதில் Enrollment Number, date மற்றும் time ஆகியவை குறிக்கப்பட்டு இருக்கும். அதனைக்கொண்டு நம் அட்டையின் தற்போதைய நிலையை அறிந்துக்கொள்ளலாம்.

நம் அட்டையின் நிலையை அறிந்துக்கொள்ள கீழ் காணும் லிங்கை click செய்து தற்போதைய நிலையை அறிந்துக்கொள்ளவும்.


இவ்வாறு பதிவு செய்த பலருக்கு அவர்கள்  பதிவு செய்துள்ள மொபைல் எண்ணிற்கு E-Aadhaar லிருந்து SMS வந்திருக்கும். அவ்வாறு வர பெற்றவர்கள் கீழ்க்காணும் லிங்கை click செய்து உங்கள் ஆதார் அட்டையினை டவுன்லோட் செய்துக்கொள்ளவும்.


 இவ்வாறு  அட்டை டவுன்லோட் ஆனால், விரைவில் தங்கள் இல்லம் தேடி அஞ்சல் மூலம் ஆதார் அட்டை வந்து சேரும்
Related Posts Plugin for WordPress, Blogger...