உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Sunday, May 12, 2013

சட்டசபை, லோக்சபா தேர்தல் வரும்போதெல்லாம், கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட மக்களுக்குப் புளித்துப் போன ஒரு வாக்குறுதி


சட்டசபை, லோக்சபா தேர்தல் வரும்போதெல்லாம், கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட மக்களுக்குப் புளித்துப் போன ஒரு வாக்குறுதி, அவிநாசி-அத்திக்கடவு திட்டம். தேர்தலுக்குத் தேர்தல், சம்பிரதாயமாக இதை அறிவிக்கும் அரசியல் கட்சியினர், அதன் பின் அதைப்பற்றிப் பேசுவது கூட இல்லை.

பில்லூர் மற்றும் பவானிசாகர் அணைகள் நிரம்பிய பின், மழைக்காலத்தில் வீணாகும் தண்ணீரை கால்வாய்கள் மூலமாக, குளங்கள் மற்றும் குட்டைகளில் நிரப்பி, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதுதான் இத்திட்டம். கடந்த 1956ல் காமராஜர் ஆட்சியின் போது இத்திட்டத்துக்கு, 132 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது; தற்போது 1,800 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும் என்கிறார்கள்.

வீணாவது எவ்வளவு?: கடந்த 2007ல் ஜூலையிலிருந்து நவம்பர் வரையிலான ஐந்து மாதங்களில் மட்டும், பவானி சாகர் அணை, 5 முறை நிரம்பியதில் காவிரிக்கு உபரியாகச் சென்ற தண்ணீரின் அளவு 20.25 டி.எம்.சி., என்கிறது ஒரு புள்ளி விவரம். பவானி நதிக்கும், நொய்யல் பாயும் பகுதிகளுக்கும் இடையில் இயற்கையாகவே மேடாகவுள்ள பல பகுதிகளுக்கு பவானி உபரி நீரை திருப்புவதே இத்திட்டத்தின் நோக்கம். மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை, அன்னூர், அவிநாசி, திருப்பூர் வடக்குப்பகுதி, பவானிசாகர், பெருந்துறை, சென்னிமலை, ஈரோடு வடக்கு, கீழ்பவானி டவுன், கோபி வடக்குப் பகுதி, குன்னத்தூர் மற்றும் இதையொட்டிய பல பகுதிகளும், மேடாக அமைந்திருப்பதுடன் (கடல் மட்டத்திலிருந்து 1,400 மீட்டர் உயரம் வரை) இப்பகுதிகளில், வேறு எந்த நீர் ஆதாரமும் இல்லை. கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள இப்பகுதிகளில், 50 குளங்கள் மற்றும் 529 குட்டைகள், எந்த விதமான நீர் வரத்துமின்றி, கடந்த 50 ஆண்டுகளாக காய்ந்து கிடக்கின்றன. பெருந்துறைக்கு அருகில், 500 ஏக்கர் பரப்பளவிலான ஒரு குளமும் இதில் ஒன்று என்பது
குறிப்பிடத்தக்கது. நீர் ஆதாரங்கள் இல்லாத காரணத்தால், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக, இப்பகுதிகளில் 700 அடி ஆழத்திலிருந்த நீர் மட்டம், தற்போது 1200 அடியைத் தாண்டி விட்டது. தென்னை மற்றும் விவசாயப் பயிர்களைக் காப்பதற்காக "போர்வெல்' போட்ட பல ஆயிரம் விவசாயிகள், கடனாளியாகியுள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இதே நிலை தான். எனவே, மழைக்காலத்தில் பில்லூர் அணையிலிருந்து உபரியாகச் செல்லும் தண்ணீரை, வெள்ளியங்காடு, காரமடை வழியாக கட்டாஞ்சி மலையைக் குடைந்து, பல பகுதிகளுக்கும் கால்வாய் வழியாக எடுத்துச் செல்வ தற்காக இத்திட்டம் தீட்டப்பட்டது.
மத்தம்பாளையம் வழியாக அன்னூர் அச்சம்பாளையம், கணுவக்கரை வரை ஒரு கால்வாய், பெருந்துறை கிரே நகர் வரை ஒரு கால்வாய், அவிநாசி வழியாக தெக்கலூரில் முடியும் வகையில் மற்றொரு கால்வாய் என பல வழிகளில் கால்வாய்களை அமைத்து, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்காகப் போடப்பட்ட இத்திட்டம்தான், கானல் நீராகவே கலைந்து

கொண்டிருக்கிறது. உபரி நீரில் இரண்டு டி.எம்.சி., தண்ணீர், இந்த குளங்கள் மற்றும் குட்டைகளை நிறைக்கப் போதுமானது என்கிறார்கள் விவசாயிகள். ஒரு முறை நிரப்பி விட்டால், மூன்று ஆண்டுகளுக்கு நிலத்தடி நீர் மட்டம் நன்றாக இருக்குமென்பது இவர்களின் நம்பிக்கை.

இத்திட்டம் கொண்டு வரப்பட்டால், கால்நடை வளர்ப்பு பெருகும்; பால் உற்பத்தி அதிகரித்து, கிராமப்பொருளாதாரம் உயர்வதுடன், நகரங்களுக்குக் குடி பெயர்தலும் தவிர்க்கப்படும்.

பல ஆண்டுகளாக, அரசியல் கட்சியினரை நம்பி ஏமாந்த விவசாயிகளை, தற்போது ஓரணியில் திரட்டும் முயற்சி மீண்டும் துவங்கியுள்ளது. இதற்காக, "அத்திக்கடவு-அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்ட போராட்டக்குழு' என்ற பெயரில், ஓர் அமைப்பு துவக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன்பாக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல இந்த அமைப்பு தயாராகி வருகிறது. இத்திட்டம் தொடர்பாக நாளை (28ம்
Click Here
Advertisement
தேதி) காரமடையிலிருந்து பெரியபுத்தூர், அன்னூர், கருவலூர், அவிநாசி, சேவூர், குன்னத்தூர் வழியாக பெருந்துறையில் முடியும் வகையில், பிரமாண்டமான வாகனப் பேரணி நடத்தப்படுகிறது.

அரசியலுக்கு அப்பாற்பட்டது! போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் கூறுகையில், ""அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்ட போராட்டக்குழு, அரசியலுக்கு அப்பாற்பட்டது. அதனால், ராமதாஸ், விஜயகாந்த், வைகோ, பெஸ்ட் ராமசாமி, டாக்டர் சிவசாமி என பல்வேறு தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். போராட்டத்தின் முடிவில், தமிழக முதல்வரைச் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளோம்,'' என்றார். மேலும் கூறுகையில் ""இத்திட்டத்துக்கு முதலில் நில அளவைக்காக 50 கோடி ரூபாய் ஒதுக்கி, பணியை

ஆரம்பித்தால் போதும்; அதன்பின், ஒவ்வொரு ஆண்டும் 200லிருந்து 300 கோடி ரூபாய் நிதி ஒதுக் கினால், ஐந்தாண்டுகளுக்குள் இத் திட்டத்தை நிறைவேற்றி விட முடியும். ""தென்னக நதிகள் இணைப்பு உட்பட வேறு எந்தத் திட்டமும், இந்த மூன்று மாவட்ட மக்களுக்கு பலன் தராது,'' என்றார்.

கண் கலங்க வைக்கும் போஸ்டர்! போராட்டக்குழு ஒட்டியுள்ள போஸ்டர்கள், அனைவரையும் சிந்திக்க வைக்கிறது. "கடைசி மரமும் வெட்டுண்டு, கடைசி நதியும் விஷமேறி, கடைசி மீனும் பிடிபட, அப்பொழுதுதான் உறைத்தது, பணத்தைச் சாப்பிட முடியாதென்று' என்ற கவிஞனின் வார்த்தைகளுக்குக் கீழே, காய்ந்து கிடக்கும் நிலத்தில் தலையில் கை வைத்து அமர்ந்துள்ள விவசாயி, காண்போரை கலங்க வைக்கிறார். "தண்ணீரை தாத்தா ஆற்றில் பார்த்தார், அப்பா கிணற்றில் பார்த்தார், நாம் குழாயில் பார்த்தோம், மகன் பாட்டிலில் பார்க்கிறான், பேரன் எங்கு பார்ப்பான்' என்று சொல்லும் போஸ்டரில் குழாயிலிருந்து ஒழுகும் சொட்டுத் தண்ணீரில் தொண்டையை நனைக்கும் குழந்தை, கண்ணில் நீரை வரவழைக்கிறது. இப்படியாக ஒவ்வொரு போஸ்டரும் ஒவ்வொரு விதமாய் ஈர்க்கின்றன


.Sa Kumars
https://www.facebook.com/kumar.van?hc_location=stream
Related Posts Plugin for WordPress, Blogger...