உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Saturday, June 15, 2013

சாதி, இருப்பிடம்,வருமானச் சான்றிதல்களை இனி ஆன்லைன் மூலம் பெறலாம்:

தமிழ்நாடு இப்பொழுது "e-District" ஆகி விட்டது.

இனிமேல் நீங்கள் V.A.O, R.I, TAHSILDAR இவர்களை நேரில் பார்க்காமல் ஆன்லைன் மூலம் சாதிச் சான்றிதல், இருப்பிடச் சான்றிதல்,வருமானச் சான்றிதல், No Graduate  போன்றச் சான்றிதல்களை பெற முடியும்.இது ஒரு கம்யூட்டரைசடு சர்டிபிகட், இதில் அரசாங்க முத்திரை இருக்காது ஆனால் டிஜிட்டல் கையொப்பம் இருக்கும். இவ்வகையான சான்றிதல்கள் அனைத்து தனியார் மற்றும் அரசாங்க அலுவலகங்களிலும் ஏற்று கொள்ளப்படும்.


இதற்க்கு நீங்கள் செய்யவேண்டியது கீழ் கண்ட இணையமுகவரிக்குச் சென்று "Register Citizen" என்பதை கிளிக் செய்து உங்களுடைய பெயர், முகவரி மற்றும் குடும்ப அட்டை எண் (அ) பாஸ்போர்ட் எண் (அ)  வாகன ஓட்டுனர் லைசென்ஸ் எண் கொடுத்தால் உங்களுடைய முழு விபரமும் ரிஜிஸ்டர் ஆகி விடும். பின்னர் உங்களுக்கு தேவையான சான்றிதல்களுக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் பிற்படுத்தப்பட்டோர் (ம) மிகவும்  மேலும் பிற்படுத்தப்பட்டோர்க்கான கல்வி உதவித்தொகை கிடைக்க வழி செய்யப்படும்.
பின்தங்கியவர்களுக்கு திருமண உதவிக்கும் வழி வகை உண்டு.
இணைய முகவரி  http://edistrict.tn.gov.in/
Related Posts Plugin for WordPress, Blogger...