உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Wednesday, September 18, 2013

GPS என்றால் என்ன?

GPS (Global Positioning System ) என்ற வார்த்தையை நாம் இப்போது அடிக்கடி கேட்கிறோம். புவி இடம் காட்டும் அமைப்பு என்று தமிழில் அழைக்கப்படும் இது உலகத்தில் எந்த இடத்தையும் மிகத் துல்லியமாக வானில் செயற்கைக்கோள்கள் மூலம் கண்டறியும் கருவி ஆகும். இது பற்றிய சில தகவல்களை இந்த பதிவில் காண்போம். 
GPS (Global Positioning System ) என்ற புவி இடம் காட்டும் அமைப்பு, ஒவ்வொரு சுற்றிலும் குறைந்தது இரண்டு தடவைகள் உலகை சுற்றி வரும் செயற்கைக்கோள்கள் (man made stars-satellites) மூலம் தகவல்களை பயனாளிகளுக்கு தரும் முறையாகும். குறைந்தது மூன்று /நான்கிற்கு மேற்பட்ட கோள்கள் நமக்கு மேலே வந்து கொண்டிருக்கும். இந்த முறையில் 32 சாட்டிலைட்கள் செயலில் ஈடுபடுகின்றன. இவற்றில் 24 தொடர் இயக்கத்திலும்,சில பழுதடையும் போது பாவிக்கவும்,சில செயலில் ஈடுபடுத்த முடியாத நிலையிலும் உள்ளன. GPS முறையில் portable navigation devices, smartphone apps, GPS sports watches, sports shoes, maps , real-time services, HD Traffic, cars, ships, aircraft, OpenStreetMap (OSM) என பல வாங்கிகள் (Navigation Receiver) இயக்கப்படுகின்றன.

பாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள், கட்டணங்கள், விதிமுறைகள் என்ன? எப்படி செய்வது? ( உழவன்)


ஒரு நாட்டைக் கடந்து மற்றொரு நாட்டிற்கு செல்கிற எவரும் கடவுச்சீட்டு (Passport) பெற வேண்டியது அவசியமாக உள்ளது. அதனால் பாஸ்போர்ட் நமக்கு தேவை என்றால் முதலில் நாம் அணுகுவது இடை தரகர்களை தான், ஆனால் தற்போது எந்த இடை தரகர்களும் இல்லாமலே நாமே நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க  இந்திய அரசாங்கம் வழிவகை செய்துள்ளது. பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் செயல்முறை இப்போது ஆன்லைனில் மாறிவிட்டது. புதியதாக நிறுவப்பட்டுள்ள “பாஸ்போர்ட் சேவக் கேந்திரா”Passport Seva Kendras (PSK) என்கிற செயல்பாட்டின் மூலம், ஆன்லைனில் விண்ணப்பித்து…..
விண்ணப்பித்த 30 நாட்களுக்குள்ளேயே உங்களது பாஸ்போர்ட்டைப் பெற்று விடலாம். அந்த அதிகாரப்பூர்வ இணையதளம் இப்போது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TATA Consultancy Services) மூலம் பராமரிக்கப்படுகிறது. நம்மில் பலருக்கு நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க விருப்பம் இருந்தாலும் அதற்கான வழிமுறைகள் தெரியாததால் தரகர்களிடம் சென்று எடுக்கிறோம், இனி அந்த அவசியம் தேவையில்லை. உங்கள் பாஸ்போர்ட்டை ஆன்லைனிலேயே நீங்கள் அப்ளை செய்யும் செயல்முறையையும், பாஸ்போர்ட் எடுக்க என்ன விதிமுறை மற்றும் வழிமுறை அனைத்தையும் தெரிந்து கொள்ள போகிறோம்.

ஆன்லைனில் பாஸ்போர்ட் அப்ளை செய்வது எப்படி? அப்பாய்ன்மெண்ட் வாங்குவது எப்படி? வழிமுறைகள் என்ன? (உழவன்)

இணையதளம் மூலம் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பதற்கான செயல்முறைகளை இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.http://passportindia.gov.in எனும் பாஸ்போர்ட் இணையத்தளத்தின் மூலமாக பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பதிவு செய்துக்கொள்ளலாம். உங்கள் பாஸ்போர்ட்டை ஆன்லைனிலேயே நீங்கள் அப்ளை செய்யும் செயல்முறையையும், பதிவு முறை, பாஸ்போர்ட் நியமனம் (Manage Appointment for Passport), போலீஸ் சரிபார்ப்பு (Police Verification), 
அப்பாய்ன்மெண்ட் வாங்குவது எப்படி, அப்ளை செய்த பாஸ்போர்ட் என்ன ஸ்டேட்டஸில் இருக்கு என்பதையும் வழிமுறை அனைத்தையும் தெரிந்து கொள்ள போகிறோம்.
Related Posts Plugin for WordPress, Blogger...