உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Tuesday, December 31, 2013

10 மாவட்டங்களில் ஆதார் அட்டை எடுக்கும் பணி நீட்டிப்பு

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ள?ர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஆதார் அட்டை புகைப்படம் எடுக்கும் பணி நீட்டிப்பு.
 1/1 

சென்னை, டிச.31 - சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஆதார் அட்டை புகைப்படம் எடுக்கும் பணி நீட்டிக்கப்படுகிறது. அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியமாகிறது. ஆதார் அட்டை எண் முக்கியமாக கருதப்படுவதால் தமிழகம் முழுவதும் பொது மக்கள் புகைப்படம் எடுத்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 77 லட்சம் பேர் ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுத்துள்ளனர். இது 70 சதவீதமும், 3 கோடியே 86 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை எண் வழங்கப்பட்டுள்ளது. இது 80.99 சதவீதமாகும்.
மற்ற மாவட்டங்களை விட சென்னை மாவட்டத்தில்தான் புகைப்படம் எடுப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதுவரை 22 லட்சத்து 60 ஆயிரம் பேர் புகைப்படம் எடுத்துள்ளனர். இது 54 சதவீதமாகும்.

ஆதார் அட்டை எண் 15 லட்சத்து 51 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது 83 சதவீதம்.
நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட குறைந்த அளவில் புகைப்படம் எடுத்துள்ள 10 மாவட்டங்களில் இன்றுடன் (31_ந் தேதி) முதல் கட்டப் புகைப்படம் எடுக்கும் பணிகள் முடிவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அவை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி அல்லது மார்ச் வரை கூட புகைப்படம் எடுக்கும் பணி தொடரும் என்று அதிகாரி தெரிவித்தார்.
இது குறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை இணை இயக்குனர் கிருஷ்ணாராவ் கூறியதாவது:_
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் புகைப்படம் எடுக்கும் பணி நீட்டிக்கப்படுகிறது. பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை இந்த பணி மேற்கொள்ளப்படும். அதனால் இந்த வாய்ப்பை பொது மக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஈரோடு, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், திருப்பூர் ஆகிய 8 மாவட்டங்களில் 2_வது கட்டப் பணி தொடங்க உள்ளது. ஏற்கனவே 14 மாவட்டங்களில் 2_வது கட்டப்பணி நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சி பகுதியில் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்கள். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts Plugin for WordPress, Blogger...