உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

திருமணபந்தல்

               தங்கள் வரன்களை இங்கு அறிமுக மணமகன் மணமகள் பிறந்த நாள், பிறந்த நேரம், பிறந்த இடம், விலாசம்,தெடர்பு எண்மற்றும் ஜாதக்த்தை என்ற ganeshtnebgobi@gmail.com முகவரிக்கு மின் அஞ்சல் செய்யுங்கள் அவை இங்கு பதியப்படும் இச்சேவை 100% இலவசம்.

அர்த்தமுள்ள திருமண மந்திரங்கள்!

ந்துத் திருமணங்கள் என்பவை விரிவான சடங்குகளைக் கொண்டு செய்யப்படுபவை. அவை யாவும் அழகானவை; அர்த்தமுள்ளவை; மங்கலமானவை. திருமணங்களில் சொல்லப்படும் மந்திரங்களின் மூலம் ரிக் வேதமே. இந்துத் திருமணச் சடங்குகளில் இடம் பெறும் மந்திரங்கள் பெரும்பாலும் இறையைப் பணிவதாகவும், மேன்மையான செய்திகளைத் தாங்கியதாகவும், தனிமனித உறுதிமொழிகளாகவும் இருக்கின்றன. ஆனால் அந்தணர்கள் இந்த வடமொழி மந்திரங்களை எக்ஸ்பிரஸ் வேகத்தில் உச்சரிப்பதனால் நமக்குத்தான் அதன் உட்பொருள் சரிவரப் புரிவதில்லை. நான் அறிந்த வரையில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

முதலில் செய்யப்படுவது விக்னேஸ்வர பூஜை. ‘கண’ என்றால் குழு. ‘பதி’ என்றால் தலைவன். எனவே கணபதி என்கிற மனிதக் குழுக்களுக்குத் தலைவனை வணங்கி, ‘கணானாஹந்த்வா கணபதிம்’ என்கிற மந்திரத்தில் துவங்கி கணபதி பூஜை நடககிறது. கோள்களின் சுழற்சித் தாக்கம் பூமியைப் பாதிக்கிறது என்கிற பட்சத்தில் மனிதர்களின் வாழ்வில் அவற்றின் தாக்கம் இல்லாதிருக்குமா? எனவே அடுத்ததாக நவக்கிரக பூஜை.  பிறகு விரதம். மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் கையில் காப்பு கட்டப்பட்டு அவர்கள் அக்கினியைத் தொழுகிறார்கள்.

அடுத்தது சங்கல்பம். மேன்மையான நோக்கங்களை நிறைவேற்ற உறுதி பூணுவதற்குப் பெயர் சங்கல்பம். அறவழியில் வாழும் மக்கட் செல்வத்தைப் பெறுவதே திருமணத்தின் நோக்கம். இல்லறத்தாரின் கடமை தர்மத்தைக் கடைப்பிடித்தல் மற்றும் நன்மக்கள் பெறுதல். அதற்காக சங்கல்பம் செய்யப்படுகிறது.  மணப்பெண்ணின் தந்தை மாப்பிள்ளையை விஷ்ணுவாகவே பாவித்து அவன் திருவடிகளைக் கழுவுகிறார். அதற்குப் பதிலாக மாப்பிள்ளை சொல்லும் மந்திரம்: ‘‘என் காலைத் தொட்ட இந்தப் புனித நீர் என் அக எதிரிகளைத் தூளாக்கட்டும். நான் இறையொளியில் தேஜஸ்பட்டுத் திகழ்வேனாக!’’ பெண்ணின் தந்தை சொல்கிறார்: ‘‘ஓ, விஷ்ணுவின் வடிவே! இதோ உங்கள் ஆசனம்! உங்களுக்கு என் இனிய வரவேற்பு!’’


பின் கன்யாதானம்! பெண்ணின் தந்தை மாப்பிள்ளையிடம் சொல்கிறார்: ‘‘இதோ, என் மகளை உமக்கு வழங்குகிறேன். இவள் எல்லாக் குணநலன்களும் பொருந்தியவள். இனிய இயல்புடையவள். அறிவில் தெளிவுடையவள். அணிகலன்கள் பூண்டு நிற்கும் இவள் உமது அறம், செல்வம், அன்பு அனைத்துக்கும் காவலாக இருப்பாள்...’’ மாப்பிள்ளை மணப்பெண்ணை ஏற்றுக் கொண்டு மும்முறை உறுதி சொல்கிறார்: ‘‘இன்பத்திலும் துன்பத்திலும் இப்பிறப்பிலும் இதற்கப்பாலும் என்றென்றும் நான் இவளது துணைவனாக இருப்பேன்!’’ என்று. மணப்பெண் தந்தையின் மடியில் அமர, தந்தை சொல்வது: ‘‘ஓ விஷ்ணுவே! அணிகலன்கள் பூண்ட என் மகளை உமக்கு வழங்குகிறேன். இதன் மூலம் எனது முந்தைய 10 தலைமுறை மற்றும் பிந்தைய 10 தலைமுறை வினைகளிலிருந்து விடுதலை பெறட்டும். எனக்கும் முக்தி கிடைக்கட்டும். அது இவள் மூலம் பிறந்த அறவழியில் நிற்கப் போகும் குழந்தைகளின் மூலம் நிகழட்டும்! அவர்கள் திருமாலையும், திருமகளையும் தொழுது அதன் மூலம் எனக்கு பிரம்மலோகப் பதவி கிடைக்கட்டும். பூமித்தாயும் படைப்பைத் தாங்கும் சக்தியும், எல்லாத் தேவர்களும், அனைத்து உயிரினங்களும் எனது மூதாதையர்கள் முக்தியடையும் பொருட்டு நான் செய்யும் இந்தக் கன்யாதானத்திற்கு சாட்‌சியாய் நிற்கட்டும்!’’ பின் மாப்பிள்ளையிடம், ‘‘பக்தி, செல்வம், ஆசை இவற்றை நிறைவேற்றிக் கொள்வதில் இவளுக்கு இடையூறு நேரக் கூடாது’’என்க, மாப்பிள்ளை பதிலுக்கு ‘‘நான் அவளுக்கு இடையூறு செய்ய மாட்டேன்’’என்று மும்முறை உறுதி கூறுகிறார்.

மணமகன் அவள் கழுத்தில் மங்கல நாண் அணிவித்து ஒரு முடிச்சுப் போட, அவனது சகோதரியர் இன்னும் இரு முடிச்சுகளைப் போடுகிறார்கள். மங்கல நாணை அணிவிக்கையில் மாப்பிள்ளை, ‘‘உன்னோடு நான் நீடு வாழ இறையைத் துதிக்கிறேன். இந்த மங்கல நாணை உன் அழகிய கழுத்தில் அணிவிக்கிறேன். எல்லாப் பேறுகளும் பெற்று நீ நூறாண்டு நிறைவான வாழ்க்கை வாழ இறை அருள்வதாக!’’ அதன்பின் அக்னியை நோக்கி அவன் அவளை அழைத்து வரும்போது சொல்லும் மந்திரம்: ‘‘பூஷா தேவதை உன்னை அக்னியின் முன்னிலைக்கு பத்திரமாக அழைத்துச் செல்லட்டும். அஸ்வினி தேவதைகள் என் வீட்டுக்கு உன்னை பாதுகாப்புடன் அழைத்து வரட்டும். பல மங்கலமான செயல்களில் என்னைத் தூண்டப்போகும் பெண்ணே! என் வீட்டின் ராணியாக அடியெடுத்து வை!’’

இதற்குப் பின் பாணிக்கிரஹ ணம். மணமகளின் கரத்தைத் தன் கைக்குள் அடக்கிக் கொண்டு மணமகன், ‘‘ஓ பண்புள்ள பெண்ணே! நீ கடவுளர்களுக்குச் சொந்தமான செல்வம். அவர்கள் கருணை மேலிட்டு நான் இல்லறம் பேணுவதற்காய் உன்னை எனக்கு அளித்துள்ளார்கள். முதுமையிலும் நாம் பிரியாமல் நீடு வாழ்வோமாக! உன் திருக்கரம் பற்றியே நான் இல்லறம் எனும் நிலைவாயிலில் நுழைகிறேன். முன்னோடிகளான பகன் மற்றும் அக்னியின் ஆசிகள் எனக்குண்டு’’ பிறகு சரஸ்வதி தேவியையும், வாயுவையும் தொழுகிறார்கள். பின் இருவரும் அக்னியை வலம் வருகிறார்கள்.

மணமகளின் பாதம் தொட்டு, மெட்டி அணிவித்து ஏழு அடிகள் அவள் எடுத்து வைக்க உதவுகிறான் மணமகன். இது ‘சப்தபதி’ எனப்படுகிறது. அப்போது சொல்லும் மந்திரம்: ‘‘ஓரடி எடுத்து வைத்ததுமே என் துணைவியாகி விட்டாய். இதன் மூலம் உன் நட்பைப் பெற்றேன். முதலடி நிறைவான உணவுக்காக. இரண்டாம் அடி எல்லாவிதமான செல்வங்களுக்காகவும். மூன்றாம் அடி தன் முயற்சிகளில் வெற்றிக்காக. நான்காம் அடி இன்பங்களுக்கும் வசதிகளுக்குமாக. ஐந்தாம் அடி கால்நடைச் செல்வத்துக்காக. ஆறாம் அடி எல்லாப் பருவ நிலைகளிலும் நலமோடு வாழ்வதற்காக. ஏழாம் அடி அக்கினியை எழுப்பி வேள்விகள் செய்யும் பேற்றுக்காக. நாராயணன் உன்னருகே இருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக! என்னோடு ஏழடிகள் எடுத்து வைத்தாய். என் துணை நீ. இப்போதிலிருந்து நாம் நண்பர்கள். இந்த நட்பிலிருந்து என்றும் விலகாதிருப்போம். சேர்ந்தே வாழ்வோம். எந்த முடிவையும் சேர்ந்தே எடுப்போம். எதையும் இணைந்தே செய்வோம். ஒருவர் மீதொருவர் அன்பு கொண்டு, ஒருவருக்கொருவர் ஆசையோடு உணவையும் செல்வத்தையும் ஒரேவிதமாய் பகிர்ந்து கொண்டு ஒரே மனத்துடன் வாழ்வோம். ஒரே நோக்கத்தோடே விரதங்களை கடைப்பிடிப்போம். நீ கவி‌தை-நான் கானம், நீ தொடுவானம்- நான் அதைத் தொடும் பூமி, நான் உயிர்விதை வழங்குவோன்- நீ அ‌தையேந்தும் பாத்திரம், நான் மனம்- நீ சொல்! என்னுடன் நட்பாக இருப்பாயாக! இன்சொல் ததும்பும் பெண்ணே, வா... செல்வமும் நன்மக்களும் பெறுவோம்!’’

அதன்பின் ஹோமம் செய்யப்படும்போது சொல்லும் மந்திரங்கள்: ‘‘இதுவரை இவளைக் காத்தருளிய தேவர்களுக்கு வந்தனம். இந்தக் கன்னி தனது வீட்டிலிருந்து கணவன் வீடு புகுகிறாள். இளவயதுக்குரிய பிணிகளெதுவும் இவளிடம் இல்லாது போகட்டும்! தனது தந்தை வீட்டின் பந்தத்திலிருந்து விடுபட்டு தன் கணவன் வீட்டில் எல்லாரோடும் புதிய சொந்தம் ஏற்படுத்திக் கொள்ளட்டும்! இந்திரனே! இவளக்கு எல்லாப் பேறுகளும் இனிய குழந்தைகளையும் வழங்குவாயாக! இவளுக்கு 10 குழந்தைகளை வழங்கி என்னை 11வது குழந்தையாக்கி இவள் பேணி வளர்ப்பாளாக! சூரியனே, எங்கள் குழந்தைகள் எதுவும் அகால மரணம் அடையாதபடி காப்பாயாக. அக்கினியே, ஆபத்துகளிலிருந்து அவளைக் காப்பாயாக. அவளுக்கு நீண்ட ஆயுளைத் தருவீராக. மழலை பேசும் குழந்தைகளோடு கொஞ்சி விளையாடும் பேற்றை அவளுக்கு அருள்வீராக! ஓ, மணமகளே! உன் வீட்டில் என்றும் துயரமில்லாமல் போகவும், நீ கணவனையும் குழந்தைகளையும் ஒரு போதும் பிரியாமலிருக்கவும் அக்கினிக்கு இந்த ஆஹுதியை வழங்குகிறோம். எல்லாத் தேவர்களும் உன்னைக் காப்பார்களாக!’’’

மணமகளை அம்மியை மிதிக்கச் செய்து, மணமகன் சொல்வது: ‘‘இந்த அம்மியின் மீது ஏறி நிற்பாயாக! உன்னை எதிர்ப்பவர்களை வலிமையுடன் எதிர்கொள்வாயாக! அதே நேரத்தில் எதிரிகளுடன் கருணையுடனும் நடந்து கொள்வாயாக! ’’  சப்த ரிஷிகளிலே வசிஷ்டரின் மனைவியான அருந்ததி அண்டவெளியில் நட்சத்திரமாய் மின்னுகிறார். அந்த அன்னையின் அருள் பெற வேண்டி பார்க்கச் சொல்லும் ஐதீகத்தின் போது சொல்லப்படுவது- மணமகன், ‘‘ஏழு முனிவர்களும் வசிட்டரின் மனைவியான அருந்ததியே சாலச் சிறந்தவள் என்று அறிவித்தார்கள். அதை மற்ற ஆறு மனைவியரும் ஏற்றுக் கொண்டார்கள். அதேபோல என் மனைவியும் கற்பில் தலைசிறந்தவள் என்று கருதப்பட்டு எட்டாவது தாரகையாய் மின்னட்டும்’’ என்று பிரார்த்திக்கிறான். இதன்பின் மணமக்கள் துருவ நட்சத்திரத்தைப் பார்க்கிறார்கள். ‘‘ஓ துருவனே! உறுதியான இடத்தில் வசிக்கிறாய் நீ. உறுதியாக இருக்கிறாய். நீ உறுதியின் ஊற்று! வாழ்வில் உயிரின் உறுதிக்கு நீயே பொறுப்பு. நட்சத்திர மண்டலங்களின் அச்சாணி நீ. உறுதியைத் தாக்கும் எதிரிகளிடமிருந்து எம்மைக் காப்பாற்று!’’

பெண் புதிய வீட்டுக்குள் நுழையும் கிருஹப்பிரவேச சடங்கின்போது சொல்லப்படும் மந்திரங்கள்: ‘‘கந்தர்வர்களும் அப்சரஸ்களும் இவள் மீது எல்லா நலன்களையும் பொழிவார்களாக! உனக்குப் புதிதான இந்த வீட்டில் நீ உன் கணவனோடு மகிழ்ச்சியாகவும் மக்கட் செல்வத்தோடும் வாழ்க. இந்த வீட்டில் உன் இல்லறக் கடமைகளில் கவனமாயிரு. உன் தலைவனான கணவனைத் தழுவியிரு. நீங்கள் இருவரும் ஒன்றாகவே வளர்ந்து, இந்த வீட்டின் நியதிகளுக்கேற்ப இதனை நிர்வகிப்பீராக. உன் கணவன் வீட்டின் ராணியாயிரு. உன் நன்னடத்தை மூலம் உன் மாமியார் ம்ற்றும் நாத்தனார்களின் அன்பை வென்று கொள்.’’ பின் மணமகள் சொல்வது: ‘‘வளம் செறிந்த, மங்கலகரமான, வீரர்களால் பாதுகாக்கப்பட்ட, மகிழ்ச்சிமயமான உறவினர்கள், மைத்துனர்கள், அவர்கள் குழந்தைகள் நிறைந்த இந்தப் புதிய வீட்டில் நான் எந்தவிதமான நடுக்கமுமின்றி நுழைகிறேன்!’’ கிரஹப்பிரவேச ஹோமத்தில் மணமகன் சொல்லும் மந்திரம்: ‘‘என் மனைவி வந்து விட்டாள் பரிசுகளோடும், கால்நடைச் செல்வத்தோடும். நிரந்தரமான வேள்வி நீடிக்க, நல்ல குழந்தைகளை அக்கினி தேவன் இவளுக்கு அருள்வானாக!’’
பிறகு இறுதியாக சேஷ ஹோமம் செய்யப்படும். அப்போது மணமகன் சொல்லும் மந்திரம்: ‘‘அக்கினியே! வாயுவே! ஆதித்தனே! பிரஜாபதியே! உங்களைத் தொழுதால் குறைகளும் நிறைகளாய் மாறும். உங்களைச் சரண் புகுந்தேன். தயைகூர்ந்து என்னைக் காக்க வருவீராக. என் மனைவிக்குத் துயரமான வினையெதுவுமிருந்தால் அதைத் தீர்த்தருள்க! உள்ளிருந்து தொல்லை செய்யும் என் எதிரிகளை நீங்கள் தீர்த்துக் கட்டவே இந்த ஆஹுதியை அளிக்கிறேன்.’’ இந்த மந்திரத்தைத் தொடர்ந்து பெரியவர்களிடம் ஆசி பெறுகிறார்கள். திருமணச் சடங்குகள் இனிதே நிறைவடைய இல்லற வாழ்வினுள் அடியெடுத்து வைக்கிறார்கள். வாழி நலம்!

திருமண பொருத்தம் நீங்களே பார்க்கலாம்.....!


திருமணம் செய்ய இருக்கும் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் கீழ்கண்ட பொருத்தங்கள் பார்த்து திருமணம் நடத்தி வைப்பது வழக்கம்.


1. தினப் பொருத்தம்: மணப் பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து துவங்கி, மணமகன் நட்சத்திரம் 
வரை எண்ணி, அந்தக் கூட்டுத் தொகையை ஒன்பதால் வகுத்தால், ஈவு 2,4,6,8,9 என்று வருமானால் இருவருக்கும் தினப்பொருத்தம் உண்டு என்று கொள்ளலாம். இந்தப் பொருத்தத்தை இன்னொரு வகையிலும் கணக்கிடலாம். அதாவது பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணிக்கொண்டு வரும்போது அந்த எண் தொகை 2,4,6,8,9,11,13,15,17,18,20,22,26,27 என்று வருமானால் இதுவும் தினப் பொருத்தம்தான் என்று சொல்வார்கள். மணமகன், மணமகள் இருவருக்கும் ஒரே நட்சத்திரமானால், அதுவும் தினப் பொருத்தம்தான். ஆனால், பரணி, ஆயில்யம், சுவாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் இருவருக்கும் ஒன்றாக இருக்குமானால், இது பொருந்தாது என்பதும் ஒரு கணிப்பு. மணமகள், மணமகன் இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக  இருக்கும் பட்சத்தில், மணமகனுக்கு அந்த நட்சத்திரத்தில் முதல் பாதமாகவும், மணமகளுக்கு அடுத்த பாதங்களில் ஏதாவதொன்றாகவும் அமையுமானால், அது சுபப் பொருத்தம் என்று கொள்ளப்படுகிறது. உதாரணமாக, இருவருக்கும் கிருத்திகை நட்சத்திரம் என்று இருக்குமானால், மணமகனுக்கு கிருத்திகை முதல் பாதம்; மணமகளுக்கு கிருத்திகை 2,3 அல்லது 4-வது  பாதம் என்று இருந்தால், மணமகனுக்கு மேஷ ராசியாகவும், மணமகளுக்கு ரிஷப ராசியாகவும் இருக்கும். இதில் மேஷ ராசி முதலில் வருகிறது என்பதால், இந்தப் பொருத்தமும் ஏற்புடையதுதான்.
அதேபோல மணமகனுக்கும், மணமகளுக்கும் ஒரே ராசியாக இருந்து, அதில் மணமகனுடைய நட்சத்திரம் முதலில் இருக்குமானால், இதுவும் சரியான பொருத்தமாகத்தான் கொள்ளப்படுகிறது. உதாரணமாக மணமகன், மணமகள் இருவருக்கும் மிதுன ராசி என்று வைத்துக்கொள்வோம். இந்த ராசியில் உள்ள நட்சத்திரங்களில் (மிருக சீரிஷம் 2,3-ம் பாதங்கள், திருவாதிரை மற்றும் புனர்பூசம் 1,2,3-ம் பாதங்கள்) மணமகனுக்கு மிருக சீரிஷமாக இருந்து மணமகளுக்கு திருவாதிரை அல்லது புனர்பூசமாக இருக்குமானால் இந்தப் பொருத்தமும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்.
2. கணப் பொருத்தம்: மூன்றுவகை கணங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. 1. தேவ கணம், 2. மனித கணம், 3. ராட்சஸ கணம்.
தேவகணத்தில் அசுவினி, மிருக சீரிஷம், புனர்பூசம், பூசம், ஹஸ்தம், ஸ்வாதி, அனுஷம், திருவோணம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் அடங்கும். மனித கணத்தில் பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகியவை அடங்கும். ராட்சஸ கணத்தில் கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம் இவை அடங்கும். இவற்றில் மணமகன் மற்றும் மணப்பெண் இருவரும் ஒரே கணத்தைச் சேர்ந்தவர்களானால், இருவருக்கும் மணம் செய்விக்கலாம். இருவருக்கும் முறையே தேவகணம், மனித கணமாக இருந்தால் இதுவும் கணப்பொருத்தம்தான். மணமகன் ராட்சஸ கணத்தைச் சார்ந்தவராக இருந்து மணமகளும், அதே கணத்தவளாக இருந்தால், மணமகளின் நட்சத்திரத்திலிருந்து மணமகனுடைய நட்சத்திரம் பதினான்காவதாக இருக்குமானால், இதுவும் கணப்பொருத்தம் என்றே கொள்ளலாம். மணமகள் ராட்சஸ கணமாகவும், மணமகன் தேவ கணமாவோ, மனித கணமாகவோ இருத்தல் கூடாது. ஆனால், மணமகள் மனித கணமாகவும், மணமகன் ராட்சஸ கணமாகவும் இருந்தால் இந்தப் பொருத்தம் சரியானதே.

3. மகேந்திரப் பொருத்தம்: பெண் நட்சத்திரம் துவங்கி, ஆண் நட்சத்திரம் முடிய வரும் எண்ணிக்கை 4,7,10,13,16,19,22,25 என்று அமையுமானால் இது மகேந்திரப் பொருத்தம் எனப்படும். இந்தப் பொருத்தத்தின் மூலம் மணமக்களின் தாம்பத்திய வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. அதாவது புத்திர பாக்கியம் நிறைவானதாக இருக்கும்.


4. பெண் தீர்க்கப் பொருத்தம்: மணப்பெண் நட்சத்திரம் துவங்கி, மணமகன் நட்சத்திரம் வரையிலான எண்ணிக்கை ஏழுக்கு மேல் இருக்குமானால் பெண் தீர்க்கப் பொருத்தம் உண்டு என்று கொள்ளலாம். இந்த எண்ணிக்கை 13க்கு மேல் இருப்பின், மிக மிகப் பொருத்தம் என்று கூறுவதுண்டு, ஏழு என்ற எண்ணிக்கை பொருத்தமானது என்றும், அதற்கு மேல் அதிகரிக்கக்கூடும் எண்ணிக்கை அதிகப் பொருத்தமானது என்றும் கொள்ளலாம். இந்தப் பொருத்தத்தால் வளமான குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான சகல சம்பத்தும் கிட்டும்.


5. யோனிப் பொருத்தம்: இல்லற சுகத்துக்கு இந்தப் பொருத்தத்தைப் பார்ப்பது மிகவும் அவசியம் என்பார்கள். இன்னின்ன நட்சத்திரத்துக்கு இன்னின்ன மிருக அம்சம் என்று ஜோதிடத்தில் கணித்திருக்கிறார்கள். எந்த மிருக அம்சத்தோடு எது சேருவது பொருத்தமாயிருக்கும் என்று பார்ப்பதுதான் இந்தப் பொருத்தம். அதாவது, அசுவினி, சதயம் - குதிரை; பரணி, ரேவதி - யானை; கார்த்திகை, பூசம் - ஆடு; ரோகிணி, மிருக சீரிஷம் - பாம்பு; திருவாதிரை, மூலம் - நாய்; புனர்பூசம், ஆயில்யம் - பூனை; மகம், பூரம் - எலி; உத்திரம், உத்திரட்டாதி-பசு; ஹஸ்தம், சுவாதி - எருமை; சித்திரை, விசாகம் - புலி; அனுஷம், கேட்டை - மான்; பூராடம், திருவோணம் - குரங்கு; உத்திராடம் -கீரி; அவிட்டம், பூரட்டாதி - சிங்கம்.
இந்த மிருக அம்சங்களில், குதிரை - எருமை, யானை - சிங்கம், ஆடு- குரங்கு, பாம்பு - எலி, பசு - குதிரை, எலி- பூனை, கீரி - பாம்பு, மான்-நாய் ஆகிய இவை ஒன்றுக்கொன்று பகையாகும். இந்த எதிர் அம்சங்கள் இல்லாத வகையில் பிற மிருக அம்சங்கள் ஒன்றுக்கொன்று இணையுமானால், அது யோனிப் பொருத்தம் என்று சொல்லப்படுகிறது. இல்லற இன்பம் எந்நாளும் நிலைத்திருக்க இந்தப் பொருத்தம் அவசியம்.


6. ராசிப் பொருத்தம்: மணப்பெண் ராசியிலிருந்து மணமகனின் ராசி வரையிலான எண்ணிக்கை ஆறுக்கு மேற்பட்டால் அது ராசிப் பொருத்தம் எனப்படுகிறது. ஒன்பதுக்கு மேற்பட்டாலும் அதி பொருத்தம் என்பார்கள். எண்ணிக்கை எட்டாக இருத்தல் கூடாது. மேஷம்,  மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் இவை பெண் ராசியாக அமையுமானால் ஆறாமிட தோஷம் இல்லை என்று கொள்ளலாம். அதேபோல ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் இவை பெண்ணுக்குரிய ராசியானால் இதற்குப் பன்னிரண்டாவது ராசியாக ஆண் ராசி அமைந்தால், பன்னிரண்டாமிட தோஷம் இல்லை என்று கொள்ளலாம். இந்தப் பொருத்தம் ஆண் வாரிசுக்கு வழி வகுக்கும் என்கிறது சாஸ்திரம்.

7. ராசி அதிபதிப் பொருத்தம்: ஒவ்வொரு ஜாதகருக்கும் அவரவருடைய ராசிக்குரிய அதிபதி யார் என்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள் 114ம் பக்கத்தில். மணமகன், மணப்பெண் இருவருக்கும் ஒரே அதிபதியாக அமைந்துவிட்டால் அது சரியான பொருத்தம். அல்லது இரு அதிபதிகளும் நட்பானவர்களாக இருந்தால் இதுவும் விசேஷம்தான். பகை அதிபதிகளாக இருத்தல்கூடாது. இந்தப் பொருத்தம் மூலமாக இரு தரப்பிலும் சம்பந்திகள் மிகவும் அன்னியோன்யமாக இருப்பார்கள்.


8. வசியப் பொருத்தம்: ராசிகளில் ஒன்றுக்கொன்று எதெல்லாம் உடன்பாடானவை; எதெல்லாம் அல்லாதவை என்பதை அறிவதன் மூலம் இந்தப் பொருத்தத்தைத் தீர்மானம் செய்யலாம். மேஷத்துக்கு - சிம்மம், விருச்சிகம்; ரிஷபத்துக்கு - கடகம், துலாம்; மிதுனத்துக்கு - கன்னி; கடகத்துக்கு - விருச்சிகம், தனுசு; சிம்மத்திற்கு - துலாம்; கன்னிக்கு - மிதுனம், மீனம்; துலாத்துக்கு - கன்னி, மகரம்; விருச்சிகத்திற்கு - கடகம், கன்னி; தனுசுக்கு - மீனம்; மகரத்துக்கு -  மேஷம், கும்பம்; கும்பத்துக்கு - மேஷம், மீனம்; மீனத்துக்கு -மகரம் என்று வசியப் பொருத்தம் சொல்லப்பட்டிருக்கிறது. பெண் ராசிக்கு ஆண் ராசி மேற்கண்ட அமைப்புப்படி பொருந்துமானால், அதுவே சரியான வசியப் பொருத்தமாகும். மற்றவை பொருத்தமற்றவை. இப்பொருத்தம் அமைவதன் மூலம் தம்பதியர் ஒருவருக்கொருவர் வசியமாகி, எந்த சந்தர்ப்பத்திலும் ஒருவரை மற்றவர் விட்டுக் கொடுக்காமல் பூரண அன்புடன் இனிய வாழ்க்கை நடத்துவார்கள்.


9. ரஜ்ஜுப் பொருத்தம்: அசுவினி, மகம், மூலம் - ஆரோகபாத ரஜ்ஜு, ஆயில்யம், கேட்டை, ரேவதி - அவரோகபாத ரஜ்ஜு; பரணி, பூரம், பூராடம் - ஆரோக தொடை ரஜ்ஜு; பூசம், அனுஷம், உத்திரட்டாதி - அவரோக தொடை ரஜ்ஜு; கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - ஆரோக உதர ரஜ்ஜு, புனர் பூசம், விசாகம், பூரட்டாதி - அவரோக உதர ரஜ்ஜு; ரோகிணி, அஸ்தம், திருவோணம் - ஆரோக கண்ட ரஜ்ஜு; திருவாதிரை, சுவாதி, சதயம் - அவரோக கண்ட ரஜ்ஜு; மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் - சிரோ ரஜ்ஜு.
இந்த ரஜ்ஜு அமைப்பில் மணமகன், மணப்பெண் இருவரது நட்சத்திரமும் ஆரோகத்திலாவது அவரோகத்திலாவது ஒரே வரிசையில் இருக்குமானால், ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்று கொள்ளலாம். ஒன்று ஆரோகத்திலும், ஒன்று அவரோகத்திலும் வெவ்வெறு வரிசையில் இருந்தாலும் சரி; இரண்டு நட்சத்திரங்களுக்கும் ஒரே ரஜ்ஜுவாக இருந்தாலும் சரி, இருவருக்கும் ரஜ்ஜுப் பொருத்தம் உண்டு என்று சொல்லலாம். மாங்கல்ய பலம் பெருக இந்தப் பொருத்தம் அவசியம்.

10. நாடிப் பொருத்தம்: அசுவினி, திருவாதிரை, புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி ஆகிய இந்த நட்சத்திரங்கள் தட்சிண பார்சுவ நாடியைச் சேர்ந்தவை. பரணி, மிருக சீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி இவை மத்திய நாடி. கார்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், ஸ்வாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி இவை வர்ம பார்சுவ நாடி. மணப்பெண், மணமகன் இருவரும் ஒரே நாடியைச் சேர்ந்தவர்களானால் நாடிப்பொருத்தம் இருக்கிறது என்று அர்த்தம். இந்தப் பொருத்தமும் மாங்கல்ய பலத்தை அதிகரிக்கச் செய்யும்.

திருமணத்தில் அரசாணிக்கால் நடுதல் ஏன் ?

அரச மரத்தின் வேரில் பிரம்மதேவனும், அடியில் திருமாலும், நுனியில் சிவமூர்த்தியும் இருக்கி றார்கள். அரசமரம் மும்மூர்த்தி ஸ்வரூபம். அதனால், சுமங்கலி கள் அரசமரத்தின் கிளையைப் பாலும் பன்னீரும் விட்டுப் பூசி த்து மும்மூர்த்திகளயும் அங்கு எழுந்தருளச் செய் கின்றார்கள்.
கும்பம்: கங்கை புனிதமான. எல்லாவற்றையும் தூய்மை செ ய்வது. நீரின்றி அமையா உலகு? என்ப பொய்யாமொழி. தண்ணீரால் பயிரும், உயிரும் தழைக்கின் றன. ஆகையால், மணவறையில் கும்பத்தில் நீர் வைத்து வழிபட வேண்டும்.
ஹோமம்: அனைத்துக்கும் அக்னியே சா ட்சி. நீயே உலகுக்கொரு காட்சி? என்று சீதாதேவியார் கூறுகின்றார். அக்னியா ல் உலகமும் உயிரும் வாழ்கின்றன. நம் உடம்பில் சூடு இல்லையானால் உயிர் நிலை பெறமாட்டா. இதனால் அக்னி யை வழிபட வேண்டும். ஹோம ப்புகை ஆயுளையும் வளர்க்கும்.
நவ கோள் வழிபாடு: ஞாயிறு முதலிய நவ கோள்கள் இந்த உலகை இயக்குகின்றன. அதனால், நவகோள் களை வழிபட வேண்டும். மணமக்களுக்கு நவகோள்கள்  நல்லருள்  செய்யும்.
தாலி: பழங்காலத்தில் அணிகலன்கள் செய் யும் நாகரிகம் இல்லாதி ருந்தபோது ஒழுக்கம் மட்டும் உயர்ந்திருந்தது. தாலம்? என்பது ப னை யோலையைக் குறிக்கும். அந்தப்பன யோலையை  ஒழுங்கு செய்து மஞ்சள் தடவி, அதில் பிள்ளயார் சுழியிட்டு இன்னாருடய மகள், இன்னாருடய மகன் மணந்து கொண்டார். வாழ்க? என்றெழு தி, அதச் சுருட்டி மஞ்சள் கயிற்றிலே கோர்த்து மணமகள் கழுத்திலே தரிப்பர். தால ஓலயில் எழுதிக் கட்டியதனால் அதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. நாகரிகம் வள ர்ந்த பிறகு (பனை ஓலை தண் ணீர் பட்டு நைந்து போவதால்) தாலியைத் தங்கத்தினால் செய்து தரித்துக்கொண்டனர். மனைவிக்கு மணவாளனே தெய்வ மாதலின் கணவருடய இருபாதங்கள் போல் திருமாங் கல்யத்தைச் செய்து மார்பில் தரித்துக் கொண்டனர்.
பெண்களுக்குத் திருமாங்கல்யம் என்ற அந்த மங்கல நாண் உயிரி னும் சிறந்தது. பெண்கள் எந்த அணிகலன்களை நீக்கினாலும், திரு மாங்கல்யத்தைக் கழற்றக் கூடாது. சீதா தேவியார் இராவணனால்கவரப்பட்ட பொழுது, எல்லா அணிகலன்களயும் சுழற்றி எறிந்தனள். திருமாங்கல்யம் மட்டும் அவள் கழுத்தில் அ ணி செய்து கொண்டிருந்தது.
அட்சதை: திருமாங்கல்ய தா ரணம் முடிந்ததும் அட்சதை தெளிப்பார்கள். க்ஷதம் என் றால் குத்வ என்று பொருள்: அகரம் அண்மைப் பொருளைத் தெரி விக்கிறது. அட்சதை என்றால் உலக்கையால் குத்தப்படாத என்று பொருள். குத்தப்படாத அரிசியில் முளைக்கும் ஆற்றல் உள்ளது. திரு மணத்துக்கு முன்பே நெல்லைப் பக்குவமாக உரித்து, முறை யோடு அதில் பன்னீர் தெளித்து, மஞ்சள் பொடி தூவி, அந்த அட்சதை யை மணமக்கள் தலையிலே இறைவ னுடய மந்திரங்களச் சொல்லித் தெளித்தால் ஜீவகளையுண்டாகும்.
அம்மி மிதித்தல்: மணமக்கள் அக் னியை வலமாக வருகிறபோது வலப்பக்கத்திலே ஒரு கல் இருக் கும். மணமகளின் பாதத்தை அந்தக் கல்லின் மீது வைக்குமாறு மண மகன் செய்வான். அதன் பொருள் ? ‘இக்கல்லைப்போல் உறுதியாக இரு ‘ என்பதாகும். தன்மேல் வைக்கும் பாரம் அதிகமானால் இரும்பு வளையும். ஆனால், கல் வளயாது; பிளந்து போகும்.
- திருமுருக கிருபானந்த வாரியார்கொங்குவேளாளக் கவுண்டர்களின் குலங்கள்

 கொங்கு நாட்டின் முதற்குடிமக்கள் கொங்கு வேளாளர்கள். கூடி வாழும் பண்பு விலங்கு பறவைகளுக்கும் உண்டு. எறும்புகளும் உண்டு. "ஒரு குடிப்பிறந்த பல்லோர்" கூட்டம் என்றனர். உற்றார் உறவினர்கள் " கூடிவாழ்ந்தால் கோடி நன்மை " என்றபழமொழிப் படி சுற்றம் தழுவி வாழ்ந்தனர். 
கூட்டத்தையே குலப்பிரிவாக அமைத்தனர். கொங்கு வேளாளர் இயற்கையோடு இணைந்து - இயைந்து வாழ்ந்தவர்கள். 

தங்களலோடு இயைந்த பறவைகள், தாவரங்கள், பூக்கள், சிறப்புடைய பெயர்கள் முன்னோர்கள் வழிமுறைப் பெயர்களையே குலப்பெயர்களாக அமைத்தனர். பண்டைக் காலத்தில் அறுபது குடிப் பெயர்கள் மட்டுமே இருந்தன. சமுதாய மரபுகள் மாறும் போது கூட்டம் விரிவடையும் போதும் இந்த எண்ணிக்கையும் விரிவடைகின்றன. பிற்காலத்தில் பாடப்பட்ட ஓதாளர் அழகுமலைக் குறவஞ்சியில் 142 குடிப்பெயர்கள் கூறப்பட்டுள்ளன. குடி அமைப்பு குலக்கணியாக - குலதெய்வ வழிபாடாக மாறியது. கொங்கு வேளாளக் கவுண்டர்களின் குலதெய்வங்கள் அக்கூட்டத்தின் முன்னோர் வழிபாடாக அமைந்திருப்பதை அறியலாம்.


*. அழகன் (அ)அலகுகுலம்

*. அந்துவன் குலம்

*. ஆடை குலம் (அ) ஆடர் குலம்

*. ஆதி குலம் (அ) ஆதிகுடி குலம்

*. ஆந்தை குலம்

*. ஆவின் (அ) ஆவ (அ) ஆவன் (அ) ஆவிஞன் குலம்

*. இளங்கம்பு குலம்

*. ஈஞ்சன் குலம்

*. ஏன குலம்

*. காரி குலம்

*. எண்ணை (அ) எண்ண குலம்

*. ஒழுக்கர் குலம்

*. ஓதாளர் (அ) ஓதாளன் குலம்

*. கணக்கன் குலம்

*. கண்ணந்தை குலம்

*. கண்ணன் (அ) கண்ண குலம்

*. கணவாளன் குலம்

*. காடை குலம்

*. காரி குலம்

*. கீரன் குலம்

*. கீரை குலம்

*. குழாயன் (அ) குழையன் குலம்

*. கூறை குலம்

*. கோவேந்தர் குலம்

*. கோவர் குலம்

*. சாத்தந்தை குலம்

*. செங்கண்ணன் குலம்

*. சிலம்பன் குலம்

*. செங்கண்டி (அ) செங்கண்ணி குலம்

*. செங்குன்றியர் குலம்
 
 
*. செம்பன் (அ) செம்பியன் (அ) செம்பொன் குலம்

*. செம்பூத்தான் குலம்

*. செவ்வாயன் (அ) செவ்வாய குலம்

*. செல்லன் குலம்

*. செவ்வந்தி (அ) செவந்தி குலம்

*. சேடன் குலம்
*. சேரன் குலம்

*. சேரர் (அ) சேரலன் குலம்

*. தழிஞ்சி குலம்

*. தனஞ்செயன் (அ) தனிச்சன் குலம்

*. தூரன் குலம்

*. தேவேந்திரன் (அ) தேவன் குலம்

*. தோடை குலம்

*. நச்சந்தை குலம்

*. நீருண்ணி (அ) நீருண்ணியர் குலம்

*. பண்ணை குலம்

*. பதரி (அ) பத்ரியர் குலம்

*. பதுமன் குலம்

*. பயிரன் குலம்

*. பவள (பவழ) குலம்

*. பனையன் குலம்

*. பனங்காடை குலம்

*. பாண்டியன் குலம்

*. பில்லன் குலம்

*. பூசன் குலம்

*. பூச்சந்தை (அ) பூச்சட்டி (அ) பூச்சந்தி குலம்

*. பூந்தை குலம்

*. பைதலி குலம்

*. பெரிய குலம்

*. பெருங்குடியான் குலம்

*. பேரிழந்தான் குலம்

*. பொடியன் குலம்

*. பொருள் தந்த குலம்

*. பொன்ன குலம் (அ) பொன்னர் குலம்

*. மணியன் குலம்

*. மயிலன் குலம்

*. மழு அழகர் குலம்

*. மழுவன் குலம் (அ) மழுவ குலம்

*. மாடை குலம்

*. மாயவர் குலம்

*. முத்தன் குலம்

*. முழுக்காதன் குலம்

*. மூலன் குலம்

*. மேதி குலம்
 
 
*. வண்ணக்கன் குலம்

*. வாணர் (அ) வாணி (அ) வாணன் குலம்

*. விலையன் குலம்

*. வில்லி குலம்

*. வெண்னை குலம்

*. வெண்டுவன் குலம்

*. வெண்டுழவர் குலம்

*. வெளியன் (அ) விளியன் குலம்

*. வெள்ளம்பன் (அ) வெள்ளை (அ) வெள்ளமை குலம்

*. வேந்தன் குலம்

*. தம்பட்டை குலம்

*. முல்லை குலம்

*. பிள்ளை குலம்
Related Posts Plugin for WordPress, Blogger...